'TIK TOK' மோகத்தால் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்..! அதிர்ச்சி வீடியோ..

'TIK TOK' இளைஞர் ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சோகம் 

First Published Sep 23, 2019, 11:25 AM IST | Last Updated Sep 23, 2019, 11:36 AM IST

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பீம்கல் மண்டலம் கோனூகொப்புலா கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவர் தனது இரு நண்பர்களுடன், கடந்த வெள்ளிக்கிழமை கப்பலவாகு தடுப்பணை பகுதிக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, தடுப்பணையிலிருந்து தண்ணீர் பாய்ந்து வரும் பகுதியில் நின்று, மூவரும் டிக் டாக் வீடியோ எடுத்துள்ளனர். 

அந்த நேரம் திடீரென அதிகமாக பாய்ந்த வெள்ளம், தினேஷ் உட்பட மூவரையும் அடித்துச் சென்றது.இதனை கவனித்த கரையோர பகுதி கிராம மக்கள் விரைந்து சென்று தினேஷின் இரு நண்பர்களையும் மீட்டர்கள். ஆனால் தினேஷ் தடுப்பணையின் நடு பகுதியில் நின்று கொண்டு இருந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

 இது தொடர்பாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் 48 மணிநேரமாக தேடி தினேஷின் உடலை கண்டெடுத்தனர். டிக் டாக் மோகத்தால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.