Watch : நண்பனின் மகளுக்கு ஆபாச வீடியோக்கள் காட்டி பாலியல் தொந்தரவு! மாற்றுத்திறனாளிக்கு மூன்று ஆண்டு சிறை!

சிவகங்கை அருகே நண்பரின் மகளுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

First Published Apr 13, 2023, 11:44 AM IST | Last Updated Apr 13, 2023, 11:44 AM IST

சிவகங்கை அருகில் உள்ள ஓட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனைமுத்து 52 வயது மாற்றுத்திறனாளயான இவர் முத்துப்பட்டியில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த நிலையில், நண்பரின் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 16 வயது மகளிடம் தனது செல்போனில் ஆபாச படங்கள் வீடியோக்களை காண்பித்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.



இதில் மனமுடைந்த சிறுமி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை விசாரணை செய்த சிவகங்கை தாலுகா போலீசார் போக்சோ வழக்கில் சோனைமுத்துவை கைது செய்தனர். 2016-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது நேற்று இந்த வழக்கில் குற்றவாளியான சோனைமுத்துவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 5000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டார்

Video Top Stories