30 பவுன் வரதட்சனை கொடுமை.!தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்.. காவல் நிலையத்தில் பரபரப்பு !வீடியோ

30 பவுன் வரதட்சனை கொடுமை.!தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்.. காவல் நிலையத்தில் பரபரப்பு !வீடியோ

First Published May 31, 2019, 11:23 AM IST | Last Updated May 31, 2019, 11:29 AM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகாவில் உள்ள தேவனாங்குறிச்சி அருகே மகாலிங்கம் எனபவர் தறி பட்டறையில் கூலி  தொழிலாக வேலை செய்து வருகிறார்

 

கடந்த 2010ஆம் ஆண்டு கீரிப்பட்டியை சேர்ந்த கந்தன் என்பவர் மகன் சக்திவேலுக்கு அவருடைய மகளை திருமணம் செய்து வைத்து இருக்கிறார். 6 பவுன் தங்க நகை மகளுக்கும், மருமகன் சக்திவேலுக்கு ஒரு பவுன் நகை போட்டு திருமணம் செய்து வைத்து இருக்கிறார்

 

மருமகன் சக்திவேலின் தகப்பனார் கந்தன் அவருடைய மகளுக்கு 30 பவுன் தங்க நகைகள் போட்டு கல்யாணம் செய்து வைத்துள்ளார். அதேபோன்று மருமகளை உன் அப்பா வீட்டுக்கு சென்று 30 பவுன் கொண்டுவருமாறு தகாத வார்த்தையில் திட்டி வற்புறுத்தி உள்ளனர்.

 

இதனை தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ண்டுள்ளார் மகாலிங்கத்தின் மகள். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

 

Video Top Stories