Boat: உயிர் பிழைக்கும் ஆசையில் ஒரு படகுக்குள் நடக்கும் போராட்டம்! யோகி பாபுவின் 'Boat' பட டீசர் வெளியானது!

நடிகர் யோகி பாபு நடிப்பில், வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள 'Boat' படத்தின் டீசர் வெளியானது.
 

First Published Dec 16, 2023, 6:40 PM IST | Last Updated Dec 16, 2023, 6:40 PM IST

நடிகர் வடிவேலு வைத்து 'இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, விஜய்யை வைத்து 'புலி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'போட்'.

நடிகர் யோகி பாபு பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், கௌரி ஜி கிஷன், எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், சாம்ஸ், மதுமிதா, கொள்ள புலி லீலா, அக்ஷதா தாஸ், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 1943 ஆம் ஆண்டு, அதாவது இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சி செய்த காலத்தில்... குண்டு மழையில் இருந்து தப்பிக்க போட் மூலம் வங்காள விரிகுடா கடல் பகுதி மூலம் தப்பித்துச் செல்லும் 10 பேரை மையப்படுத்தி இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் போது போட்டில் ஏற்பட்ட விரிசலால் ஏழு பேர் மட்டுமே போட்டில் இருக்க முடியும் என்கிற சூழ்நிலை உருவாகிறது. போட் வெளியே சுறா மீன் ஒன்று சுற்றி கொண்டிருக்க... அனைவரும் எப்படி தப்பிக்கிறார்கள்? இறுதியில் என்ன நடக்கிறது என யூகிக்க முடியாத கதைகளத்தில் இப்படத்தை சிம்பு தேவன் இயக்கியுள்ளார்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை, மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Video Top Stories