அனைவரும் சைலெண்டா இருக்கும்போது வேற லெவலில் வாழ்த்து சொல்லிய ஆழ்வார்பேட்டை ஆண்டவர்..! வீடியோ

பிகில் திரைப்பட விழாவில் சுபஸ்ரீ மரணம் குறித்து விஜய் பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த கமல்ஹாசன்..!

First Published Sep 20, 2019, 12:58 PM IST | Last Updated Sep 20, 2019, 12:58 PM IST

 மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் செய்தியாளர்களை சந்தித்தார், ஹிந்தி தொடர்பாக மத்தியா உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டு கருத்து குறித்து செய்தியார்களை கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த கமல், தாய் மொழி மீது கை வைத்தல் மன்னிக்க முடியாது என்றார். தாய் மொழி மீது கை வைக்காதவரை அவர்கள் கருத்து ஏற்க்கப்படும் என்றார்.

நாட்டிக்கு பொதுவாக மொழி அவசியம் என்று நடிகர் ரஜினி காந்த் கூறுகிறாரே என்று கேட்டபோது, பொதுவான மொழியாக ஆங்கிலம் இருக்கும் போது இந்தி எதற்கு என்று அவர் பதிலடி கொடுத்தார். விபத்தின் மூலம் கிடைத்த மொழி ஆங்கிலமாக என்றாலும் அது நன்மையாக அமைந்தது என்று கூறிய அவர், அடிமையாக இருந்த போதிலும் ஆங்கிலத்தை வைத்து நாம் வேறு கருவி செய்து கொண்டோம் என்று தெரிவித்தார்.

பிகில் திரைப்பட விழாவில் சுபஸ்ரீ மரணம் குறித்து விஜய் பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த கமல்ஹாசன், அந்த மேடையை நியாயமாக குரல் கொடுப்பதற்காக நடிகர் விஜய் பயன்படுத்தியிருப்பதாக பாராட்டினார்.சரியான நேரத்தில் நியாயத்திற்காக குரல் கொடுத்த விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Video Top Stories