Asianet News TamilAsianet News Tamil

Rathnam Trailer: ஆக்ஷனில் பொளந்து கட்டும் விஷால்! கெட்ட வார்த்தைகளோடு வெளியான 'ரத்னம்' பட ட்ரைலர்!

விஷால் - ஹரி காம்போவில், ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாக உள்ள 'ரத்னம்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள 'ரத்னம்' திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது 

'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் 'ரத்னம்' திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள் ஆவர். 

ஏப்ரல் 26 அன்று 'ரத்னம்' திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் பாடல் சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் 12,000 +மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து சற்று முன் இப்படத்தின் ட்ரைலர் ஆக்ஷன் அதிரடியோடு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories