திருமணம் நடந்த கையோடு மதம்மாறிய விஜய் டிவி புகழ் ஆல்யா மானசா .. வெளியான வீடியோ..!
எளிய முறையில் ஆல்யா மானசா – சஞ்சீவ் திருமண விழா கோலாகலமாக கொண்டப்பட்டு திருமணம் முடிந்த கையோடு இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்று கொண்டார் அவருக்கு சத்திய கலிமாவை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்கள் சொல்லி கொடுத்தார்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் ராஜா ராணி தொடரில் இருவரும் செம்பா, கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கணவன், மனைவியாக சேர்ந்து நடித்திருந்தனர். சஞ்சீவ், ஆல்யா மானஷா இருவருக்கிடையே காதல் மலர்ந்தது. அதைதொடர்ந்து இருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்துக்கொள்வது, மணிக்கணக்கில் பேசுவது என காதலை வளர்த்தனர். இந்த நடவடிக்கைகளை எல்லாம் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.
விஜய் டிவி நடத்திய விழா ஒன்றில் ஆல்யாவுக்கும், சஞ்சீவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைக்கப்பட்டது. இருவரும் மேடையிலேயே மோதிரம் மாற்றிக் கொண்டனர். இதனால், அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகம் இருந்தது.
ஆனால் அவர்கள் திருமணம் குறித்து வெளிப்படையாக எதையும் பேசவில்லை. ராஜா ராணி சீரியல் முடிந்தகையோடு இருவரும் வெளியூர் சென்றுவிட்டனர். இந்நிலையில் ஆல்யா மானசா – சஞ்சீவ் ரகசிய திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது
பின்னர் எளிய முறையில் ஆல்யா மானசா – சஞ்சீவ் திருமண விழா கோலாகலமாக கொண்டப்பட்டது திருமணம் முடிந்த கையோடு இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்று கொண்டார் அவருக்கு சத்திய கலிமாவை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்கள் சொல்லி கொடுத்தார்..