வீடியோ காலில் விஜய் சேதுபதி.. நடிகர் சூரி ஓட்டலில் நடந்த தரமான சம்பவம்..!

   நடிகர் சூரி ஓட்டலுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த விஜய் சேதுபதி..!

First Published Nov 2, 2019, 4:53 PM IST | Last Updated Nov 2, 2019, 4:53 PM IST


சினிமா கைவிட்டாலும், உணவகங்கள் கை விடாது என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார் நடிகர் சூரி. அவர் நடித்த முதல் படத்தில் அந்த பரோட்டா கணக்கு காமெடியை மக்கள் எப்படி மறக்க முடியாதோ, அதே போல் அவராலும் அந்த காட்சியை மறக்க முடியாததாலோ என்னவோ, படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கும்போதே ஹோட்டல் பிஸினஸில் இறங்கி விட்டார் சூரி. 2017ல் மதுரை காமராஜர் சாலையில் அய்யன், அம்மன் உணவகத்தை தொடங்கினார்.

அந்தத் தொழில் சக்கைபோடு போடவே மீண்டும் உணவக கிளைகளை பெருக்க வேண்டி அம்மன் உயர்தர சைவ உணவகம் மற்றும் அய்யன் உயர்தர அசைவ உணவகம் ஆகிய இரண்டு புதிய கிளைகளை மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் துவக்கி புதுக்கணகை துவங்கி இருக்கிறார் சூரி. இந்த புதிய உணவகங்களை சூரியின் உடன் பிறவா சகோதரரான நடிகர் சிவகார்த்திகேயன் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.

பல பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் அம்மன் உயர்தர சைவ உணவகம் மற்றும் அய்யன் உயர்தர அசைவ உணவகத்தின் திறப்புவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திறப்புவிழாவிற்கு வருகைதந்து வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் சூரி மற்றும் குடும்பத்தினர் தங்களது நன்றியினை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நடிகர் சூரியின் அம்மன் உணவகம் மற்றும் அய்யன் உணவகத்தை பார்வையிட சர்ப்ரைஸ் விசிட் செய்த நடிகர் விஜய் சேதுபதி அங்கு இருந்த ரசிகர்கள் உடன் செலஃபீ எடுத்து கொண்டு இருந்தார் அப்போது அதில் ஒரு ரசிகர் தனது தொலைபேசியில் இருந்து உறவினருக்கு வீடியோ கால் செய்து விஜய் சேதுபதியிடம் பேச வைத்தார் அதன் பின்னர் நடிகர் சூரியை வாழ்த்தி சென்றார் விஜய் சேதுபதி


 

Video Top Stories