Asianet News TamilAsianet News Tamil

அப்துல் கலாம், அன்னை தெரேசாவோடு இணைந்த முதல் தமிழ் நடிகர்..! வைரலாகி வரும் வீடியோ

நடிகர் விஜய்க்கு தமிழகத்தின் கடைக்கோடி சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் மெழுகு சிலை அமைத்திருப்பது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

First Published Nov 23, 2019, 2:50 PM IST | Last Updated Nov 23, 2019, 2:50 PM IST

உலக சுற்றுலா தளங்களில் முக்கிய பகுதி கன்னியாகுமரி . அந்த மாவட்டத்தில் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மாயாபுரி- WAX அருங்காட்சியகத்தில் நடிகர் விஜய்க்கு இன்று மெழுகு சிலை, விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் முன்னிலையில் திறந்து பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் ஏற்கனவே ,அப்துல் கலாம், அமிதாப் பச்சன் , அன்னை தெரசா , ஒபாமா, போன்ற முக்கியமான ஜாம்பவான்களான 20 பேருக்கான சிலைகள் மட்டுமே உள்ளன.

அந்த முக்கியமானவர்கள் பட்டியலில் தற்போது நடிகர் விஜய்  மெழுகு சிலையும் இணைத்துள்ளது.

தமிழ் நடிகர்களில் விஜய்க்கு மட்டுமே இந்த அருங்காட்சியகத்தில் சிலை உள்ளது .விஜய்யின் மெழுகு சிலையுடன் சுற்றுலா பயணிகளும் , ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வருகின்றனர். தற்ப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Video Top Stories