டைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..!
பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றிபெறவும் மற்றும் தளபதி நீண்ட ஆயுள் பெறுவேண்டியும் விஜய் ரசிகர்கள் செய்து என்ன தெரியுமா ?
விஜய் அட்லீ - கூட்டணியில் மூன்றாவது முறையாக இனைந்து உருவாகியுள்ள திரைப்படம் பிகில் இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் வெளிக்கிழமை வெளியாக உள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மயிலாடுதுறையில் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் மண் சோறு சாப்பிட்டு பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றிபெறவும் மற்றும் தளபதி நீண்ட ஆயுள் பெறுவேண்டியும் பிரார்த்தனை செய்தனர் இதில் விஜய் படங்கள் வெளியாகும் போது ரசிகர்களின் கொண்டாட்டங்களே அதிகம் காணப்பட்டு வந்த நிலையில் இம்முறை படம் வெற்றியடைய வேண்டி விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டுள்ள இந்த நிகழ்வு சமுக வலைத்தளங்கில் அதிகமாக அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.