பாடிக்கொண்டே மேடையில் சரிந்து உயிர்விட்ட பாடகர்..! நெஞ்சை உலுக்கும் வீடியோ..

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேடையில் இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த பிரபல கன்னடப் பாடகர் பாடிக்கொண்டிருந்தபோதே சரிந்து விழுந்து மரணமடைந்தார். திடீர் மாரடைப்பே அவரது இறப்புக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.அவருக்கு வயது 51.
 

First Published Sep 5, 2019, 6:09 PM IST | Last Updated Sep 5, 2019, 6:09 PM IST

பிரபல கொங்கனி இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் ஜெர்ரி பஜ்ஜோடி (Jerry Bajjodi). கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த இவர், இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு மங்களூரில் உள்ள பேஜாய் பகுதியில் இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார். ஆனந்த் நாக் நடித்த படத்தின் பிரபல கன்னட பாடல் ஒன்றை அவர் பாடிக் கொண்டிருந்த போது திடீரென்று அப்படியே முன் பக்கமாக சாய்ந்தார்.

உடனடியாக, அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவ மனைக்குத் தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போதே இசைக் கலைஞர் ஒருவர் உயிரிழந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜெர்ரி மேடையில் பாடியபடி சரிந்து விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீப காலங்களில் இப்படி மேடையில் சரிந்து விழுந்து இறந்துபோகும் கலைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
 

Video Top Stories