அனிருத் - விஜய் சேதுபதி குரலில் பிரசாந்தின் 'அந்தகன்' பட அந்தம் ப்ரோமோ பாடலை வெளியிட்டார் தளபதி விஜய்!

நடிகர் பிரஷாந்த் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள 'அந்தகன்' படத்தின் அந்தம் பாடலை தளபதி விஜய் வெளியிட்டார்.
 

Share this Video

90-களில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் பிரஷாந்த், 'பொன்னர் சங்கர்' படத்திற்காக சுமார் 5 வருடம் எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்ததாலும்... மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தோல்வியை தழுவியதால் இவரின் சினிமா கேரியர் சரசரவென சரிந்தது. அந்த நேரத்தில் தான் பிரசாந்தின் இல்லற வாழ்க்கையிலும் சில பிரச்சனைகள் வர துவங்கின.

ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரஷாந்த், காம்பேக் கொடுக்க நினைத்த படங்கள் அனைத்துமே... ஒன்றின் பின் ஒன்றாக தோல்வியை தழுவியது.

இந்நிலையில், பிரஷாந்த் நம்பி இருக்கும் திரைப்படம் தன்னுடைய அப்பா இயக்கி - தயாரித்துள்ள அந்தகன் படம் தான். ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக ஆரம்பமாகி உள்ளன. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'அந்தகன் அந்தம் ப்ரோமோ' பாடலை இன்று தளபதி வெளியிட்டுள்ளார். இந்த பாடலை, சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி பாடி உள்ளனர். பிரபு தேவா இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video