Asianet News TamilAsianet News Tamil

"Spider Man"-க்கு இப்படிப்பட்ட நிலைமையா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..! வீடியோ

ஸ்பைடர்மேன் காப்பாற்றுங்கள் என்று உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

சூப்பர் ஹீரோ படங்களியில் வரிசையகாக வந்து கொண்டு இருக்கற ஸ்பைடர்மேன் படத்திற்கு உலகம் முழுவதும் வெறித்தனமாரசிகர்கள் உள்ளனர்

 2002ஆம் ஆண்டு ஸ்பைடர் மேன் படம் வெளியானது அதனை தொடர்ந்து 2004-ம் ஆண்டு  ஸ்பைடர் மேன் 2 வெளியானது இதன் தொடரசியக்காக 2007ல் ஸ்பைடர் மேன் 3 ஆகிய படங்கள் வெளிவந்தன  பின்னர் 4 வருடம் கழித்து  2012 ஆம் ஆண்டு The Amazing Spider-Man வெளிவந்தது 2014 ஆம் ஆண்டு the Amazing Spider-Man 2 வெளியானது 

அதைப்போல் 2017ஆம் ஆண்டு  ஸ்பைடர்மேன் ஹோம் கமிங் படங்கள் வந்தன கடைசியாக இந்த வருடம் சமீபத்தில் Spider-Man: Far From Home வெளியாகி வசூல் குவித்தது இதுவரை ஏழு ஸ்பைடர்மேன் படங்கள் வந்துள்ளன இந்நிலையில் ஸ்பைடர்மேன் வரிசைப் படங்களில் இனிமேல் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

 ஸ்பைடர்மேன் திரைப்படங்கள் சோனி மற்றும் டிஸ்னி ஆகிய இரண்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு வருகின்றன இதில் வரும் லாபத்தில் அதிகப்பங்கு சோனி நிறுவனத்திற்கு செல்வதுபோல் ஒப்பந்தம் போட்டு இருந்ததாக கூறப்படுகிறது தற்போது டிஸ்னி நிறுவனம் லாபத்தில் 50% கேட்டுள்ளது இதற்கு ஒப்புக் கொள்ளாததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக இனிமேல் ஸ்பைடர்மேன் படங்களை தயாரிக்க போவதில்லை என்றும் மார்வெல் தலைவர் கெவின் பெய்ஜ் அறிவித்துள்ளார் இது ஸ்பைடர்மேன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது இதைத்தொடர்ந்து ஸ்பைடர்மேன் காப்பாற்றுங்கள் என்று உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது..

Video Top Stories