"கோலிவுட்டின் அபூர்வ சகோதரர்கள்" ரஜினி & கமலை புகழ்ந்து தள்ளிய சிவா!

Amaran Audio Launch : சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேற்று அப்பிடத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

First Published Oct 19, 2024, 11:54 PM IST | Last Updated Oct 19, 2024, 11:54 PM IST

பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் தான் "அமரன்". இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை சாய் பல்லவி அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். வருகின்ற அக்டோபர் மாதம் 31ம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் தீபாவளி ஸ்பெஷல் திரைப்படமாக வெளியாக உள்ளது. 

இந்நிலையில் நேற்று இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து பேசிய நாயகன் சிவகார்த்திகேயன், "நான் மிகப்பெரிய தலைவர் ஃபேன் என்பது கமல் சாருக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல், இந்த பையனிடம் திறமை இருக்கிறது. அவனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று நினைத்து தான் இந்த திரைப்படத்தை எனக்காக தயாரித்துக் கொடுத்துள்ளார்". 

"அதேபோல இந்த திரைப்படம் வெளியானதும், அதை முதல் நாளிலேயே பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னை கட்டாயம் பாராட்டுவார். உண்மையில் இந்த கோலிவுட் உலகின் அபூர்வ சகோதரர்கள் என்றால் அது கமல் சார் மற்றும் தலைவர் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தான்" என்று கூறி அவர்கள் இருவரையும் மனதார பாராட்டி இருக்கிறார் சிவகார்த்திகேயன். 

இந்த அமரன் திரைப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் திரைப்பட வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக பல திரைப்படங்களை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து வருவதும் அனைவரும் அறிந்ததே. 

Video Top Stories