Asianet News TamilAsianet News Tamil

வைரலாகி வரும் சந்தானத்தின் 'கிக்' பட மேக்கிங் வீடியோ வெளியானது!

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள 'கிக்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

First Published Jan 14, 2023, 1:25 PM IST | Last Updated Jan 14, 2023, 1:25 PM IST

இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை தன்யா ஹோப், செந்தில், கோவைசரளா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பிரமானந்தம்,மன்சூர் அலிகான், YG மகேந்திரன்
சாது கோகிலா உட்பட பெரும் நட்சத்திர பட்டாளம் செய்த நடித்த காமெடி கலாட்டா YouTube-ல் பெரும் வைரலாகி வருகிறது.

காமெடியுடன் படத்தை பிரமாண்டமாக  காட்டியதுடன், ஒரு அதிரடியான கமர்ஷியல் விருந்தாக படைத்துள்ளார்கள். பரபரப்பாக இறுதி கட்ட பணிகளில் இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Fortune Films நவீன் ராஜ் தயாரிப்பில் இயக்குநர் பிரசாந்த் ராஜ் தயாரிக்கிறார். நடிகர் சந்தானம் நடிப்பில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக மிகப்பெரும் பொருட்செலவில்,  பிரமாண்டமான 'செட்'கள், அதிரடி சண்டைகள், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகளுடன் அசத்தலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

Video Top Stories