வேட்டையன் ரிட்டர்ன்ஸ்... வெக்கேஷன் முடிந்து சென்னைக்கு திரும்பிய ரஜினிகாந்த் - வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ

ஓய்வெடுப்பதற்காக அபுதாபி சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்திற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

First Published May 28, 2024, 10:35 AM IST | Last Updated May 28, 2024, 10:35 AM IST

வேட்டையின் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் ஓய்வு எடுப்பதற்காக கடந்த மே 16ஆம் தேதி அன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த். இந்த நிலையில் 11 நாட்கள் அபுதாபியில் தங்கி இருந்து ஓய்வு எடுத்து வந்த ரஜினிகாந்த், அங்கு பல விஐபிகளையும் சந்தித்தார். அப்போது ஐக்கிய அரபு அமீரகம் அரசு ரஜினிக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து உள்ளது.

கடந்த மே 23ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகம், நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 28 ஆம் தேதியான இன்று அதிகாலை 3 மணி அளவில் அபுதாபியில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்பொழுது ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டதும் ஒரு பெண்மணி நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது காரில் ஏறி போயஸ் கார்டனில் உள்ள இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.

Video Top Stories