பிரமிக்க வைக்கும் பிரமாண்டம்.. 'சலார்' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு மிரள வைத்த படக்குழு!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
 

First Published Dec 25, 2023, 2:43 PM IST | Last Updated Dec 25, 2023, 2:43 PM IST

KGF பட இயக்குனர், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள சலார் திரைப்படம் மூன்று நாட்களில் சுமார் 400 கோடியை கடந்துள்ள நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

எந்த அளவுக்கு பிரமாண்ட செட் அமைத்து, 'சலார்' படத்தை படமாக்கி உள்ளனர் என்பது இந்த வீடியோவை பார்த்தால் தெரிகிறது. அதே போல்... ஒவ்வொரு காட்சியை எடுக்க இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் எந்த அளவுக்கு மென்கெட்டுள்ளனர் என்பதையும் பார்க்க முடிகிறது. இந்த பிரமாண்ட மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்திற்கு கிடைத்து வரும் வரவேற்ப்பால்... இரண்டாம் பாகத்தை மேலும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில், ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா, ஜெகபதி பாபு, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories