"ஆன்மீகத்தின் உச்சம் தான் இது" - சமூக தொண்டு நிறுவனம் தொடங்குகிறார் நடிகை ஆத்மிகா - வைரல் வீடியோ!
கோவையில் பிறந்து இன்று தமிழ் திரையுலகில் நல்ல நடிகையாக வளம் வருபவர் தான் ஆத்மிகா. கடந்த 2017ம் ஆண்டு வெளியான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
மிகுந்த இறை நம்பிக்கையும் மற்றும் சமூக சேவை எண்ணமும் உடைய நடிகை ஆத்மிகா சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கி உள்ளார். நடிப்பு, தொழில்நுட்ப ஈடுபாடு, மெய்ஞான பேச்சாற்றல் என பன்முக திறமை கொண்ட ஆத்மிகாவிடம் இதைப்பற்றி கேட்டபோது, ஆதரவற்றவர்களுக்கு உணவளிப்பதும், கஷ்டத்தில் வாடும் உயிர்களுக்கு உதவுவதுமே ஆன்மீகத்தின் உச்சம் என்று விளக்கமளித்தார்.
சிறுவயதிலிருந்தே பொதுநல ஈடுபாடு அதிகமுள்ள ஆத்மிகா, விரைவில் சமூக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி, பல நற்காரியங்களில் ஈடுபடப்போவதாக உறுதியளித்துள்ளார்.