வீட்டின் முன் குவிந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ

விடுமுறை தினமான நேற்று, நடிகர் ஷாருக்கானை பார்க்க அவரது வீட்டின் முன் குவிந்த ரசிகர்களை சந்தித்து, அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

First Published Jan 23, 2023, 9:12 AM IST | Last Updated Jan 23, 2023, 9:12 AM IST

நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் வருகிற ஜனவரி 25-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நாயகியாக நடித்துள்ளார். பதான் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், மும்பையில் உள்ள நடிகர் ஷாருக்கானின் மன்னட் இல்லத்தின் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

பதான் படத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும் வேளையில், ஷாருக்கானுக்கு ஆதரவளிக்கும் விதமாக அவரது வீட்டின் முன் ரசிகர்கள் குவிந்தனர். இதை அறிந்த ஷாருக்கான், உடனடியாக வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தார். அப்போது தனது சிக்நேச்சர் ஸ்டெப்பையும் போட்டு ரசிகர்களிடம் தன் அன்பை வெளிப்படுத்தினார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Video Top Stories