விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..! வீடியோ..
விக்னேஷ் சிவனின் 34வது பிறந்தநாளை நயன் தனது தோழிகள் புடைசூழ வெகுவிமரிசையாகக் கொண்டாடிய நடிகை நயன்..
நடிகை நயன்தாராவின் நெடுநாள் காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் நேற்று தடபுடலாகக் கொண்டாடப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற அறிவிப்பை நயன் பிறந்தநாள் பரிசுச் செய்தியாக சிவனுக்குச் சொன்னதாகத் தெரிகிறது.
அதாவது கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இவர்கள் இருவரும் வெளிப்படையாகக் காதலித்துவருகின்றனர். விக்னேஷ் சிவன் நயனை விட ஒரு வயது இளையவர் என்றாலும் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருவரும் கணவன் மனைவி போலவே வாழ்ந்து வருகின்றனர்.
தங்களது பார்ட்டி மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணங்களின் படங்களை பொதுவெளிகளில் பகிர்ந்துகொள்ள அவர்கள் எப்போதும் தயங்கியதேயில்லை. சமீபத்தில் விக்கியை தயாரிப்பாளராகவும் உயர்த்திப்பிடித்த நயன் அவரது தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவனின் 34வது பிறந்தநாளை நயன் தனது தோழிகள் புடைசூழ வெகுவிமரிசையாகக் கொண்டாடி அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட உள்ளார்