ரசிகரின் செயலால்..! திறப்பு விழாவுக்கு சென்ற நடிகைக்கு நடந்த விபரீதம்.. ரத்தம் வடிய கதறி அழுது பேசிய வீடியோ..!
பிரபல நடிகையில் முகத்தில் குத்துவிட்ட ரசிகர்...!! மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது, வலிதாங்க முடியாமல் துடித்த பேசிய வீடியோ..!
சூப்பர் மார்க்கெட் திறப்புவிழாவுக்கு வந்த நடிகையின் முகத்தில் ரசிகர் ஒருவர் விட்ட குத்தால், அந்த நடிகையின் மூக்கு உடைந்து ரத்தம் போல பொலவென கொட்டியது. வலி தாங்க முடியாமல் நடிகை மேடையிலேயே கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு அடர் லவ் படத்தில் தன் கண்ணசைவு மூலம் பிரியா பிரகாஷ் வாரியர் பிரபலமடைந்தார் என்றால், அதே படத்தில் அவருக்கு இணையாக தன் நடிப்பாலும் தான் தேர்வு செய்த கதாபாத்திரத்தாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நூரின் ஷெரீப்.அந்தப் படத்துக்குப் பின்னர் புதிய வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தது இந்நிலையில் மிகப் பிரபலமான நடிகைகள் பட்டியலில் இடம்பெற்ற அவர் நேற்று முன்தினம் கேரளம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி என்ற இடத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை திறந்துவைக்க வருகை புரிந்தார். மாலை 4 மணிக்கு வர வேண்டிய அவர், இரண்டு மணி நேரம் தாமதித்து மாலை 6 மணிக்கே வந்தார். அவருக்காக முன்கூட்டியே ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். நேரம் செல்லச் செல்ல நடிகை நூரின் வராததால் அவர் மீது கடும் கோபத்தில் ரசிகர்கள் காத்திருந்தனர். பின்னர் அவர் காரில் அங்கு வந்தார். அவரின் வருகையைக் கண்டு அங்கு ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அவரின் காரை சுற்றி கூட்டம் சூழ்ந்தது. அவரை எதிர்த்து பலமாகக் குரலெழுப்பினர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ரசிகரின் கை நூரின் முகத்தில் பலமாக பட்டது, இதில் அவரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.
வலி தாங்க முடியாமல் நூரின் கதறி அழுதார் பிறகு பொறுத்துக்கொண்ட அவர் மேடையில் பேசினார். அப்போது, தான் வேண்டுமென்றே தாமதமாக வரவில்லை கூட்டம் அதிகம் சேர வேண்டும் என்பதற்காக தன்னை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பக்கத்திலுள்ள ஒரு ஓட்டலில் தங்க வைத்தததால்தான் தாமத த்திற்கு காரணம் என நூரின் விளக்கும் அளித்தார். பின்னர் இது குறித்து தெரிவித்த அவரின் தாயார், நூரின் முகத்தில் ரசிகர் தாக்கியதில் அவரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது அதில் நூரின் வலி தாங்காமல் கதறி அழுதுவிட்டார் என தெரிவித்தார். அத்துடன் நூரின் மேடைக்கு வரும்போது பலர் தகாத வார்த்தைகளால் அவரை திட்டியதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். நூரின் கதறி அழுத வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அது வைரலாகி வருகிறது.