மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய அஜித் கட்சி போஸ்டர்.. மன்னிப்பு கேட்டு கதறும் தல ரசிகர் வீடியோ..!
ஆர்வமிகுதியால் சில ரசிகர்கள் செய்யும் செயல், திரை உலகினர் மட்டுமின்றி அனைவரையும் முகம் சுழிக்க வைக்கும் நிலைக்கு சென்றிருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய், இவர்கள் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் மோதலில் ஈடுபடுவது அனைவரும் அறிந்ததே. படத்தின் வெற்றி, வசூல் என தொடங்கி தற்போது யூடியூப் லைக்ஸ் வரை சண்டை அதிகரித்துகொண்டே வருகிறது.
பல சமயங்களில் இவர்களின் சண்டை அனைவரையும் முகம் சுழிக்க வைக்கும் நிலைக்கு சென்றிருக்கிறது.அந்த வகையில் அஜித் ரசிகர் ஒருவர் அதிமுகவிற்கு அஜீத் திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் சூட்டி, மதுரை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக, அஜீத் படத்தை போட்டு போஸ்டர் டிசைன் செய்து, சமூகவலைதளத்தில் பரப்பிய உள்ளார் அதே ரசிகர் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்ட வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதே போல மதுரை விஜய் ரசிகர் கில்லிசிவா என்பவர் 2021 ல் மக்களுக்காக நிகழ போகும் அதிசயங்களே என்றும் விஜய்யின் படத்தின் பின்னணியில் ரஜினி,கமல் படங்களை அச்சிட்டு ஏக்கத்துடன் மக்கள், எதிர்பார்ப்பில் நாங்கள் என்று போஸ்டர் அடித்து ஒட்டி சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார் விஜய் ரசிகர்.
ஆர்வமிகுதியால் சில ரசிகர்கள் செய்யும் செயல், திரை உலகினர் மட்டுமின்றி அனைவரையும் முகம் சுழிக்க வைக்கும் நிலைக்கு சென்றிருக்கிறது.