மறைந்த பாடகி... இளையராஜாவின் மகள் பவதாரிணி 'ஆரியமாலா' படத்திற்கு பாடிய அத்தி பூவைபோல லிரிக்கல் பாடல் இதோ!
80ஸ் காலத்து கிராமத்து காதலை கண்முன் நிறுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள 'ஆரியமாலா' திரைப்படத்தில், பவதாரணி பாடிய அத்திப்பூவை போல... என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.
இயக்குனர் ஜேம்ஸ் யுவன் இயக்கத்தில் ஆர் எஸ் கார்த்திக் என்கிற அறிமுக நடிகர் ஹீரோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆரியமாலா. இந்த படத்தில் மனிஷா ஹீரோயினாக நடிக்க மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், மறைந்த பின்னணி பாடகி இளையராஜாவின் மகள் பவதாரணி பாடிய அத்திப்பூவ போல இன்று தொடங்கும் காதல் மெல்லிசை பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த படத்திற்கு ஜெய்சங்கர் ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய, ஹரிஹரன் படத்தொகுப்பு செய்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் லிரிக்கல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் ரசிகர்கள் மனதை உருக வைத்துள்ளது. குறிப்பாக பாவதாரிணியின் குரலை மிஸ் பண்ணுவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.