நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'அகத்தியா' படத்தின் டீசர் வெளியானது!
நடிகர் ஜீவா வித்தியாசமான ஹாரர் கதை களத்தில் நடித்துள்ள, 'அகத்தியா' திரைப்படத்தின் டீசர் வெளியானது.
நடிகர் ஜீவா ஹாரர் ஜர்னரில் நடித்துள்ள திரைப்படம் அகத்தியா, இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க, அர்ஜுன் சர்ஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ரெடின்ஸ் கின்ஸிலே, ராதாரவி , உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பாடலாரிசியர் பா விஜய் எழுதிய - இயக்கி உள்ள இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தீபக் குமார்பதி ஒளிப்பதிவு செய்ய, சன் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். விறுவிறுப்பான கதை காலத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர், தற்போது வெளியாகிய படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.