"சமூக பணிகளுக்காக தொடர்ந்து செயல்படுவேன்".. தனியார் கல்லூரி ஆண்டு விழா - நெகிழ்ச்சியடைய வைத்த நடிகர் பாலா!

KPY Bala : தொடர்ச்சியாக தனது சொந்த செலவில் பல சமூக பணிகளை மேற்கொள்ளும் நடிகர் பாலாவிற்கு தமிழக மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய வரவேற்பு தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றது.

First Published Mar 16, 2024, 9:51 PM IST | Last Updated Mar 16, 2024, 9:51 PM IST

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலையில் அமைந்துள்ள, எக்ஸெல் வணிகவியல் மற்றும் கந்தசாமி கல்வியியல் கல்லூரியில், ஆண்டு விழா நிகழ்ச்சி கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வருக்கு கல்வி நிறுவனத் தலைவர் ஏகே.நடேசன், துணைத்தலைவர் மதன் கார்த்திக் ஆகியோர் தலைமை தாங்கினார். 

கல்லூரியின் செயல் இயக்குனர் பொம்மணராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பிரபல டிவி புகழ் பாலா கலந்து கொண்டு சினிமா பிரபலங்களை போல மிமிக்கிரி செய்து மாணவ மாணவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் மாணவ மாணவியருடன் "கரு கரு கருப்பாயி" என்ற பாடலுக்கு  உற்சாக நடனமாடி பாட்டு பாடி அவர்களை குஷிப்படுத்தினார். இதனை அடுத்து மாணவ மாணவியர் பாலா அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

கல்லூரி மாணவர் ஒருவர் பாலாவிற்கு கைகளால் வரையப்பட்ட ஓவியத்தை பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சி நிறைவில் பத்திரிக்கையாளருக்கு பேட்டியளித்த பாலா பொதுமக்களுக்கு தொடர்ந்து தன்னால் முடிந்த சேவைகளை செய்ய உள்ளதாகவும், நிறைய திட்டமிடலோடு சமூக சேவை பணிகளுக்காக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Video Top Stories