ஆதியின் கடைசி உலகப் போர்.. சத்தமே இல்லாமல் வெளியான "Boombastic" முதல் சிங்கிள் பாடல்!

HipHop Adhi : ஹிப்ஹாப் தமிழா ஆதியின் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு மற்றும் இசையில் உருவாகி வரும் பெரிய பட்ஜெட் படம் தான் கடைசி உலகப் போர்.

First Published Aug 9, 2024, 8:21 PM IST | Last Updated Aug 9, 2024, 8:25 PM IST

இசையமைப்பாளராக தனது கலை பயணத்தை தொடங்கிய ஹிப் ஹாப் தமிழா ஆதி, கடந்த 2017ம் ஆண்டு வெளியான "மீசைய முறுக்கு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் களம் இறங்கினார். அந்த திரைப்படத்தின் இயக்குனரும் எழுத்தாளரும் ஆதி தான். 

தொடர்ச்சியாக "நட்பே துணை", "நான் சிரித்தால்" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஹிப்ஹாப் ஆதி, தொடர்ச்சியாக பல திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் வருகின்றார். இந்நிலையில் அவருடைய இயக்கம், எழுத்து, தயாரிப்பு மற்றும் இசையில் உருவாகி வரும் அடுத்த திரைப்படம் தான் கடைசி உலகப்போர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் தற்பொழுது விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், அந்த திரைப்படத்திலிருந்து "Boombastic" என்கின்ற முதல் சிங்கிள் பாடல் தற்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த படத்தில் நடித்துள்ள முக்கிய கதாபாத்திரங்களில் அறிமுகமும் வெளியாகியுள்ளது. 

Video Top Stories