"நம்பிக்கையில் துவங்கி; நன்றியில் முடிகிறது" வேட்டையன் வெற்றி விழாவில் பேசிய இயக்குனர் ஞானவேல்!

Vettaiyan Success Meet : கடந்த அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் படம் வெளியான நிலையில், இன்று அப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டுள்ளது.

First Published Oct 21, 2024, 10:21 PM IST | Last Updated Oct 21, 2024, 10:21 PM IST

பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முதல் முறையாக பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த அக்டோபர் 10ம் தேதி வெளியான படம் தான் வேட்டையன். என்கவுன்ட்டர் என்ற முறையை பற்றி ஆழமாக பல விஷயங்களை அலசியுள்ளது இந்த படம். பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் இந்த படம் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமாகியுள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பகத் பாசில், ராணா, துஷாரா மற்றும் ரித்திகா ஆகியோர் நடித்த நிலையில், ரஜினியின் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். 

கடந்த அக்டோபர் 10ம் தேதி வெளியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் விரைவில் OTT தளத்திலும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டுள்ளது.

Video Top Stories