பெண்களுக்கு மத்தியில் வடிவேலாக மாறிய அட்லி.. வைரலாகும் டிக் டாக் வீடியோ..!
பிகில் படக்குழுவினருடன் இயக்குநர் அட்லி டிக் டாக் செய்யும் வீடியோ
தீபாவளி டிரீட்டாக கடந்த 25ம் தேதி ரிலீஸ் ஆன ’பிகில்’ திரைப்படம் 152 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. என்ன தான் ’பிகி’ல் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், திரையிட்ட இடமெல்லாம் ஹாட்ரிக் ஹிட் அடித்து வருகிறது. இதற்கு முந்தைய விஜய் படங்களின் வசூல் சாதனைகளைக் கூட ’பிகில்’ திரைப்படம் அதிரடியாக தகர்த்து வருகிறது. ’பிகில்’ படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாது, திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
படம் வெளியானது முதலே படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது பிகில் படக்குழுவினருடன் இயக்குநர் அட்லி டிக் டாக் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.