Asianet News TamilAsianet News Tamil

சிறுவர்கள் எடுக்கும் திடீர் முடிவால் ஏற்பாடு விபரீதம்.. த்ரில்லிங் நிறைந்த பார்த்திபனின் TEENZ பட ட்ரைலர் இதோ!

TEENZ Trailer : பிரபல இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் தான் TEENZ. இந்த படத்தின் ட்ரைலர் இப்பொது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

பிரபல இயக்குனர் பாக்யராஜ் அவர்களுடன் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றி, அவருடைய படங்களில் சிறு சிறு வேடங்கள் ஏற்று நடித்து, தனது கலை பயணத்தை தொடங்கியவர் தான் பார்த்திபன். அதன்பிறகு கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான "புதிய பாதை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை தொடங்கினார். 

தனது முதல் திரைப்படத்திற்காக இரு மாநில விருதுகளையும், ஒரு தேசிய விருதையும் வென்ற வெகு சில இயக்குனர்களில் பார்த்திபன் அவர்களும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறி உள்ளது. கடந்த 2019 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெளியான "ஒத்த செருப்பு" மற்றும் "இரவின் நிழல்" ஆகிய இரு திரைப்படங்களும் தொழில்நுட்ப ரீதியாகவும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தற்பொழுது TEENZ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்பார்த்திபன். தாங்கள் பெரியவர்களாக மாறிவிட்டோம் என்பதை தங்களுடைய பெற்றோருக்கு உணர்த்தும் வகையில் செயல்பட எண்ணி, சில சிறுவர்கள் கூட்டம் தங்களது பள்ளியில் இருந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறுகின்றனர். 

அவர்கள் தங்களுடைய அந்த பயணத்தில் எதிர்கொள்ளும் அனைத்து விஷயங்களையும் திகிலோடு கூறியுள்ள ஒரு திரைப்படம் தான் TEENZ. பிரபல இசையமைப்பாளர் இமான் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. பார்த்திபனின் பல படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சுதர்சன் தான் இந்த படத்திற்கும் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபு அவர்களும் நடித்துள்ளார். 

Video Top Stories