துருவ் விக்ரமின் 'மனசே' இண்டிபென்டென்ட் ரொமான்டிக் பாடல் வெளியானது!
விக்ரம் மகன் துருவ் இளம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள நிலையில், இவர் நடித்துள்ள இண்டிபென்டென்ட் பாடலான 'மனசே' பாடல் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
தன்னுடைய தந்தை விக்ரமை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு அறிமுகமாகியுள்ளார் துருவ். இவர் நடிப்பில், ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு ஆதித்ய வர்மா, மற்றும் மஹான் ஆகிய இரண்டு படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களே கிடைத்தது.
இதை தொடர்ந்து தற்போது... மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் துருவ் நாளை தாண்டிய 27 ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், இவர் நடித்துள்ள 'மனசே' என்கிற இண்டிபென்டென்ட் ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது. காதல் பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலுக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.