"கோடி நன்றி சொன்னாலும் பத்தாது சார்" தனுஷ் குரலில் "ஓ ராயா பாடல்" - உருக்கும் இசை புயலின் இசை! Special Video!

Oh Raaya : பியானோ இசைக்கருவியில் ஓ ராயா பாடலை ஏ.ஆர் ரகுமான் வாசிக்க, தனுஷ் குரலில் அந்த பாடல் ஒலிக்கும் புதிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

First Published Aug 10, 2024, 4:31 PM IST | Last Updated Aug 10, 2024, 4:31 PM IST

கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி உலக அளவில் வெளியானது "ராயன்" திரைப்படம், பா பாண்டி திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனராக தனுஷ் களமிறங்கிய திரைப்படம் தான் அது. கலாநிதி மாறன் தயாரிப்பில், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவான அந்த திரைப்படம் கோலிவுட் உலகுக்கு மீண்டும் ஒரு வெற்றி திரைப்படமாக மாறியது.

உலக அளவில் 100 கோடியையும் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது ராயன் படத்தில், தனுஷின் இயக்கம் பலராலும் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில், ஏ.ஆர் ரகுமானின் இசையும் பலரை ஈர்த்தது என்றே கூறலாம். குறிப்பாக அந்த திரைப்படத்தில் ஒலித்த "ஓ ராயா" என்ற பாடலை ஏ.ஆர் ரகுமான் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ரகுமானுக்கு நன்றி கூறி தனுஷ் வெளியிட்டுள்ள ஒரு ஸ்பெஷல் வீடியோவில், இசைப்புயல் ஓ ராயா பாடலை பயனோவில் வாசிக்க, அவர் அருகில் நின்று தனுஷ் அந்த பாடலை படியுள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. 

Video Top Stories