Vaathi Trailer: படிப்புக்காக போராடும் வாத்தியாக இறங்கி அடிக்கும் தனுஷ்..! வெளியானது பட்டையை கிளப்பும் 'வாத்தி'

நடிகர் தனுஷ் நடித்துள்ள 'வாத்தி' திரைப்படம் இந்த மாதம் 17ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

First Published Feb 8, 2023, 7:16 PM IST | Last Updated Feb 8, 2023, 7:16 PM IST

'வாத்தி' திரைப்படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில்,  இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகின்றனர். தனுஷ் கணக்கு வாத்தியாராக நடித்துள்ள இந்த படத்தை, தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தின் மூலம் முதல் முறையாக தனுஷ் டோலிவுட் திரையுலகில் நேரடியாக என்ட்ரி கொடுக்க உள்ளார்.

ஏற்கனவே தனுஷ் நடித்து தெலுங்கில் டப் செய்யப்பட்ட '3' திரைப்படம் டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில்,  தனுஷின் இந்த படத்திற்கும் அதிக அளவில் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. மேலும் இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாக்கியுள்ள இப்படம், கல்வி வியாபாரம் அல்ல.. அனைவருக்கும் கிடைக்க வேண்டிய உரிமை என்கிற சமூக கருத்தை வலியுறுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.

கல்விக்காக போராடும் வாத்தியாராக தனுஷ் தன்னுடைய நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார் என்பது ட்ரைலரின் மூலமே தெரிகிறது.  இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரசிகர்கள் படம் வெற்றி பெற தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Video Top Stories