Asianet News TamilAsianet News Tamil

ஜான்வி கவர்ச்சி கன்னியாக மாறி... Jr NTR-ருடன் ரொமான்ஸ் பண்ணும் தேவரா பட' பத்த வைக்கும்' பாடல் வெளியானது!

ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ள, 'தேவரா ' பட இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published Aug 5, 2024, 6:01 PM IST | Last Updated Aug 5, 2024, 6:01 PM IST

இயக்குனர் கொரட்டலா சிவா எழுதி - இயக்கியுள்ள திரைப்படம் 'தேவரா' தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர் ஆர் ஆர் பட நாயகன் ஜூனியர் என்டிஆர் மிகவும் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, ரத்னவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளனர் சுதாகர் மிக்கிலினி மற்றும் கோசராஜு ஹரிகிருஷ்ணா.

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை செப்டம்பர் 27ஆம் தேதி வெளியிட உள்ளதாக பட குழு அறிவித்துள்ள நிலையில், தற்போது இப்படத்தில் ஜான்வி கவர்ச்சி மழை பொழியும் காதல் பாடலான 'பத்த வைக்கும்' பாடல் உருவாகியுள்ளது. இந்த பாடலின் தமிழ் வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.