Asianet News TamilAsianet News Tamil

நயன்தாராவின் 'கனெக்ட்' படத்தில் இருந்து வெளியான நான் வரைகிற வானம்.. லிரிக்கல் பாடல் வெளியானது!

நயன்தாரா நடித்துள்ள 'கனெக்ட்' படத்தில் இருந்து நான் வரைகிற வானம் என்கிற லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது.
 

நடிகை நயன்தாரா 'மாயா' படத்தின் இயக்குனர், அஸ்வின் சரவணன் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்து வரும் திகில் திரைப்படம் 'கனெக்ட்'. இந்த திரைப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் பிரமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் அவ்வபோது இந்த படம் குறித்த தகவல்களை படக்குழுவினர் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளது மட்டுமின்றி தயாரிக்கவும் செய்துள்ளார். ஏற்கனவே 'கனெக்ட்' படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 99 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் திரையிடப்டுள்ள உள்ள இந்த படத்தில், நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் வினை நடித்துள்ளார். மேலும் நயன்தாராவிற்கு தந்தையாக நடிகர் சத்யராஜும், முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அனுபம்கேர் ஆகியோர் நடித்துள்ளார். பல்வேறு எதிர்பார்க்ககளுக்கு மத்தியில் உருவாக்கி உள்ள, இந்த படத்தில் இடம்பெற்ற 'நான் வரைகிற வானம்' லிரிக்கல் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Video Top Stories