Asianet News TamilAsianet News Tamil

Kombari Vettapuli: தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இருந்து வெளியான கொம்பரி வேட்டபுலி லிரிக்கல் பாடல்!

நடிகர் தனுஷ் நடிப்பில், பொங்கலுக்கு வெளியாக உள்ள கேப்டன் மில்லர் படத்தில் இருந்து, கொம்பாரி வேட்டபுலி என்றும் லிரிக்கல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published Jan 8, 2024, 10:06 PM IST | Last Updated Jan 8, 2024, 10:06 PM IST

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடித்து முடித்துள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாக உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் புரோமோஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில்... தற்போது ப்ரியங்கா மோகனை தனுஷ் தேடி சென்று காதலிப்பது போன்ற வரிகளுடன் உருவாகியுள்ள கொம்பாரி வேட்டபுலி பாடல் வெளியாகியுள்ளது. ஒரு பணக்கார வீட்டு பெண்ணாக இருக்கும் ப்ரியங்காவும்... சாதாரண மனிதராக இருக்கும் தனுஷும் எப்படி போராளியாக மாறுகிறார்கள் என்கிற எண்ணமே இப்படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த பாடலை... நடிகர் ரௌடி பேபி பாடல் புகழ் தீ பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories