Asianet News TamilAsianet News Tamil

பச்சை குத்தி பச்சை பச்சையாக பேசி விஜய்யை கொச்சைப்படுத்திய ரசிகன்.. பரபரப்பு வீடியோ..!

நேற்று தனியார் கல்லூரி ஒன்றில் பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது கூட்டம் அதிகரித்ததால் ரசிகர்கள் அடித்து விரட்டப்பட்டனர்.

நேற்று பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது கூட்டம் அதிகரித்ததால் ரசிகர்கள் அடித்து விரட்டப்பட்டனர்.  இந்த விவகாரம் விஜய் ரசிகர்களை ஆத்திரப்பட வைத்துள்ளது. #அய்யோஅம்மாஆடியோலான்ச்  என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அதில், ‘’விஜய் ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்ளவே அசிங்கமாக இருக்கிறது. விஜய் மேடையில் தான் என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே எனக் கூறுகிறார். வெளியில் போலீசாரை வைத்து தனது ரசிகர்களை விரட்டி அடிக்கிறார்’ என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர். 

 

Video Top Stories