First Published Nov 18, 2019, 12:37 PM IST | Last Updated Nov 18, 2019, 12:40 PM IST
உலக நாயகன் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள், 'கமல்-60', 'உங்கள் நான்' மற்றும் 'உலக நாயகன்' ஆகிய பெயர்களில் ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்டிங் செய்து வந்தனர்.
இந்த 3 ஹேஷ்டேக்குகளையெல்லாம் மொத்தமாக பின்னுக்கு தள்ளி, 'கவின்' ஹேஷ்டேக் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரால் டுவீட் செய்யப்பட்டு டிரெண்டிங்கில் சாதனை படைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.