பிக் பாஸ் தர்ஷனை வேணாம்னு சொன்ன காதலி.. கேக் வெட்டி கொண்டாடிய சனம் ஷெட்டி..!

நேற்று  இந்த வீடியோவை விஜய் டிவிக்கு அனுப்பி ஒளிபரப்புமாறு கேட்டதற்கு, அவர்கள் இந்த வீடியோவில் நான் இருப்பதால் ஒளிபரப்ப மறுத்துவிட்டதாக  சனம் ஷெட்டி குறிப்பிட்டுள்ளார்.

First Published Sep 16, 2019, 3:11 PM IST | Last Updated Sep 16, 2019, 3:37 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்த நிலையில், முன்னதாகக  பிக் பாஸ் வீட்டில் தர்ஷன் மற்றும் ஷெரின் இடையே துளிர்த்த காதல் பற்றி குறித்து தர்ஷனின் காதலியும், மாடலுமான சனம் ஷெட்டி " தர்ஷனின் வாழ்க்கையில் இருந்து விலகுவதாகவும், அவரது சந்தோஷம் தான் தனக்கு முக்கியம் என தன்னுடைய காதலை விட்டுக் கொடுப்பதாக சனம் ஷெட்டி தெரிவித்திருந்தார் 

இந்நிலையில்,நேற்று சனம் ஷெட்டி தர்ஷனின் பிறந்தநாளை காக்கும் கரங்கள்’ என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி தர்ஷனின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோவை பகிர்ந்து சில வரத்தைகளை பதிவிட்டு இருந்தார் 

" எந்த ஒரு விளம்பரத்திற்காகவும் நான் செய்யவில்லை என்றும இந்த வீடியோவை விஜய் டிவிக்கு அனுப்பி ஒளிபரப்புமாறு கேட்டதற்கு, அவர்கள் இந்த வீடியோவில் நான் இருப்பதால் ஒளிபரப்ப மறுத்துவிட்டதாகவும் குழந்தைகளுடனான பிறந்தநாள் கொண்டாட்டத்தை தர்ஷன் மிஸ் செய்துவிட்டார்’ என சனம் ஷெட்டி குறிப்பிட்டுள்ளார்.

Video Top Stories