Asianet News TamilAsianet News Tamil

ஆசிய படங்களிலேயே இதுவே முதல் முறை! 'பிகினிங்' ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள்! வெளியான ட்ரைலர்!

ஒரே திரையில் இரண்டு படங்கள் திரையிடும் புது முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது.
 

First Published Dec 15, 2022, 7:33 PM IST | Last Updated Dec 15, 2022, 7:33 PM IST

Lefty Manual Creations தயாரிப்பில், இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கத்தில், வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் “பிகினிங்”. 
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ஒட்டுமொத்த திரையுலகை திரும்பி பார்க்க வைத்ததுடன், ரசிகர்களை பெரும் வியப்பில் ஆழித்தியுள்ளது. ஆசியாவில் முதல்முறையாக ‘ஸ்பிலிட் ஸ்கிரீனில்’  இரண்டு கதைகளை காட்டும் டெக்னிக்கில் இப்படம் உருவாகியுள்ளது. 

முதல் முறையாக, வித்தியாசமான, புதுமையான அனுபவம் எனும் வார்த்தைகள் தமிழ் சினிமாவில் வழக்கமாக ஒவ்வொரு திரைப்படத்திலும் சொல்லப்படும் வார்த்தைகளாகும், ஆனால் இந்த வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தத்தை தந்து, முதல் முறையாக அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது  “பிகினிங்” பட டிரெய்லர். 

இப்படத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கதை விவரிக்கப்படும், வலது பக்கம் மற்றொரு கதை நடைபெறும். ஒரே சமயத்தில் இது நடக்கும். அதே நேரத்தில், பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள். ஒரு டிராமா, ஒரு திரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வினோத் கிஷன்,  கௌரி G கிஷன், சச்சின், ரோகிணி, லகுபரன், மகேந்திரன், சுருளி, KPY பாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜெகன் விஜயா. சுந்தரமூர்த்தி கே.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வீரகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு,  CS பிரேம்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Video Top Stories