சென்னையில் பீர் அபிஷேகம்.!. தல அஜித் தலையிலே கொட்டி வெறித்தனம் காட்டிய ரசிகர்ளின் வேற லெவல் வீடியோ..

உலகம் முழுவதும்  வெளியாகவுள்ள நிலையில் திரையரங்கங்களில் நேற்று இரவு முதல் அஜித் ரசிகர்கள் ஆரவாரம் செய்து விடிய விடிய திருவிழாவாக கொண்டாடி அசத்தினார்.  

First Published Aug 8, 2019, 2:01 PM IST | Last Updated Aug 8, 2019, 2:06 PM IST

நடிகர் அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படம் இன்று  உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் திரையரங்கங்களில் நேற்று இரவு முதல் அஜித் ரசிகர்கள் ஆரவாரம் செய்து விடிய விடிய திருவிழாவாக கொண்டாடி அசத்தினார்.  

அதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் பால் அபிஷேகம், குத்தாட்டம், பட்டாசு,கார் ட்ரிவிங்  என தன்னோடு வெறித்தனமான மகிழ்ச்சியை அஜித் ரசிகர்கள் வெளிப்படுத்தினார்கள் இதையெல்லாம் தாண்டி சென்னை ரோகிணி தியேட்டரில் அஜித் ரசிகர்கள் அஜித் உருவ படத்திற்கு பீர் அபிஷேகம் செய்து  ஆரவாரம் படுத்தினார்கள்.

முதல் நாள் முதல் காட்சியை பார்க்க உலகம் முழுக்க உள்ள அஜித் ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு திரண்ட காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது

அஜித்தின் கேரியர் பெஸ்ட் என அவரது ரசிகர்களால் கொண்டாடப்படும் பில்லா, மங்காத்தா போன்ற படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா மீண்டும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனாலேயே இப்படத்திற்கு ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் நிலையில் படத்தைப் பார்த்த விமர்சகர்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories