சுதந்திரம் வாங்கி தந்த காந்தியை... எப்படி எல்லாம் கற்பனை செஞ்சி இருக்காங்க மக்கள்? 1947 படத்தின் ஸ்னீக் பீக்!

ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்சன் தயாரித்துள்ள, இந்தியாவின் சுதந்திரம் குறித்து பரபரப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கக்கூடிய 'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
 

First Published Apr 5, 2023, 7:53 PM IST | Last Updated Apr 5, 2023, 7:53 PM IST

'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் டீசர் வெளியானதில் இருந்து, இந்த எபிக் பீரியட் ட்ராமாவை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். கெளதம் கார்த்திக் நடித்துள்ள இந்த படம், ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது. பத்து தல படத்தில், மாஸான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த, கெளதம் கார்த்திக் இப்படத்தின் மூலம், தன்னுடைய நடிப்பின் அடுத்த கட்ட பரிமாணத்தை வெளிப்படுத்தி இருப்பார் என எதிர்பார்க்க படுகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.  'ஆகஸ்ட் 16, 1947'  படம், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக தைரியமாக  வெகுண்டெழுந்த இந்தியர்கள் பற்றியம், தேசத்துக்காக போராடிய மக்களின் வாழ்க்கை குறித்து, இதுவரை யாரும் படம் பிடித்து காட்டிராத பக்கத்தை படமாக்கி காட்டியுள்ளார் இயக்குனர். 

இந்நிலையில் இப்படத்தில், ஸ்னீக் பீக் காட்சியில்... புகழ் காந்தியின் நடவடிக்கைக்கு வெள்ளைக்காரர்கள் அஞ்சுவதாக படிக்கும் போது... காந்தியை பார்த்து வெள்ளையர்கள் பயம் கொள்ள காரணம் என்ன என அவர்களுக்குள்ளேயே வெள்ளந்தியாக, பேசி கொள்ளும் காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.