Asianet News TamilAsianet News Tamil

பருத்தி வீரன் கெட்டப்பில்... ஆட்டத்தில் பொறி பறக்கவிடும் ஆர்யா! காதர் பாட்ஷா படத்தில் இருந்து வெளியான ப்ரோமோ!

ஆர்யா நடித்துள்ள காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் படத்தில் இருந்து, முதல் சிங்கிள் பாடலான டௌலத்தான ரவுடி பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. 
 

கொம்பன், மருது, விருமன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் முத்தையா. குறிப்பாக கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான இவர் தற்போது காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோயின் சித்தி இத்னானி நடித்துள்ளார்.

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வரும் இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் டிரஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்நிலையில், காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது , ஆர்யா பருத்தி வீரன் கார்த்தி கெட்டப்பில் வெறித்தனமாக டௌலத்தான ரவுடி பாடலுக்கு ஆட்டம் போடும் புரோமோ வெளியாகி, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Video Top Stories