அரசியல் ஈடுபாடு குறித்த கேள்வி... ஒரே வார்த்தையில் நெற்றி பொட்டில் அடித்தது போல் பதில் கூறிய ஸ்ருதி ஹாசன்!

அரசியல் ஈடுபாடு குறித்து, நடிகை ஸ்ருதி ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ஒரே வார்த்தையில் பதிலளித்து, அனைவரையுமே ஆப் செய்துவிட்டார்.

First Published Oct 17, 2023, 1:43 PM IST | Last Updated Oct 17, 2023, 1:43 PM IST

கோவை காந்திபுரம் பகுதியில் வரமகாலட்சுமி சில்க்ஸ் கடையின் 56வது கிளை இன்று துவங்கப்பட்டது. இதனை நடிகை ஸ்ருதி ஹாசன் துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பின்னர் இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், கோவை வருவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். பட்டு சேலைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்த அவர்.. நான் வழக்கமாக traditional ஆக துணி உடுத்த மாட்டேன், அவ்வாறு உடுத்தினால் எனக்கு பட்டு தான் பிடிக்கும் என்றார்.

அரசியல் ஈடுப்பாடு குறித்த கேள்விக்கு, இல்லை என ஒரே வார்த்தையில் நெற்றி பொட்டில் அடித்தது போல் பதிலளித்தார். தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் இந்திய பெண் கதாபாத்திரத்தை எடுத்து நடித்திருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது எனவும் அதுமட்டுமின்றி அந்த படத்தில் இயக்குநர், தயாரிப்பாளர், வசன கர்தா அனைவருமே பெண்கள் என்பதால் அது போன்ற ஒரு குழுவுடன் இணைந்தது மிகவும் அழகான ஒன்றாக அமைந்துள்ளது என்றார். 

Video Top Stories