தனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..!
தொழிநுற்ப கோளாறால் ரோகினி திரையரங்கில் அசுரன் படம் திரையிடுவதில் நேற்று இரவு ஏற்பட்ட சிக்கல்.
சென்னை ரோகினி திரை அரங்கில் நேற்று தனுஷின் அசுரன் திரைப்படம் இரவு 10.30 க்கு திரையிடபட்டது. முதல் நாள் காட்சியை பார்ப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரையரங்குக்கு திரண்டு வந்தனர்.
அப்போது படத்தின் ஆரம்பத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து படம் திரையிடுவதில் சிக்கல் இருந்தது. இதனால் கோவம் அடைந்த ரசிகர்கள் ஆக்ரோஷத்தில் ரகளை செய்தனர். பின்னர் திரையிடுவதில் ஏற்பட்ட சிக்கலை சரி செய்ய முயற்சித்த திரையரங்கம் இரண்டு மணி நேரமாக ரசிகர்களை காக்க வைத்தது.
இறுதியில் கோளாறு சரிசெய்யபடாததால் டிக்கெட் பணத்தை திரையரங்க நிர்வாகிகள் திருப்பி கொடுத்தனர்.