Aranmanai 4 : தங்கை தமன்னாவின் மரணம்.. கண்டுபிடிக்க களமிறங்கும் சுந்தர் சி - மிரட்டும் அரண்மனை 4 ட்ரைலர் இதோ!

Aranmanai 4 Trailer : பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் அரண்மனை. இந்த படத்தின் டிரைலர் இப்பொழுது வெளியாகி உள்ளது.

First Published Mar 30, 2024, 6:18 PM IST | Last Updated Mar 30, 2024, 6:18 PM IST

பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் குஷ்பூ நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான "முறைமாமன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் சுந்தர் சி. தற்பொழுது தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குனர்களில் அவரும் ஒருவர். 

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே அரசியல் சார்ந்த படத்தில் நடிக்க வைத்து அந்த படத்திற்காக மாநில விருதை வென்ற ஒரு இயக்குனர் இவர். இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறி உள்ளது. கமர்சியல் மன்னனாக தமிழ் சினிமாவில் விளங்கி வரும் சுந்தர் சி தற்பொழுது, ஏற்கனவே தான் இயக்கிய அரண்மனை படத்தின் மூன்று பாகங்களின் தொடர்ச்சியாக அப்படத்தின் நான்காம் பாகத்தை இயக்கி முடித்திருக்கிறார். 

வரும் ஏப்ரல் மாதம் இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், தற்பொழுது அந்த படத்தின் டிரைலர் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபல நடிகை தமன்னா இந்த திரைப்படத்தில் சுந்தர்சியின் தந்தையாக நடித்திருக்கிறார். அவருடைய மரணத்தில் உள்ள மர்மத்தை அவிழ்க்கும் ஹீரோவாக சுந்தர் சி நடித்துள்ளார்.

Video Top Stories