Raayan : பேய் மாதிரி வருவான்.. இறங்கி செய்வான்.. SJ சூர்யாவுடன் மோதும் தனுஷ் - மாஸாக வெளியான "ராயன்" ட்ரைலர்!
Raayan Trailer : தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகியுள்ள ராயன் படத்தின் ட்ரைலர் இப்பொது வெளியாகியுள்ளது. விரைவில் அந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பிரபல நடிகர் தனுஷ் இரண்டாவது முறையாக இயக்குனராக களமிரங்கியுள்ள திரைப்படம் தான் "ராயன்". மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகின்ற ஜூலை மாதம் 26ம் தேதி உலக அளவில் இந்த படம் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தணிக்கைக்குழு A சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில் மூத்த நடிகர்கள் பிரகாஷ்ராஜ், எஸ் ஜே சூர்யா, இளம் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், மற்றும் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், துஷார விஜயன், மூத்த நடிகர் சரவணன், தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், சுந்தீப் மற்றும் காளிதாஸ் ஜெயராமின் அண்ணனாக தனுஷ் நடித்திருக்கிறார். எஸ்ஜே சூர்யா மற்றும் தனுஷ் இடையே நடக்கும் விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொது ராயன் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.