Asianet News TamilAsianet News Tamil

மாஸ்டருக்கு சொந்த புத்தி இல்ல... சீண்டிப்பார்த்த அசீம்... தரமான பதிலடி கொடுத்த ராபர்ட் - வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் கொடுத்த டாஸ்கின் போது அசீமுக்கு ராபர்ட் மாஸ்டர் தரமான பதிலடி கொடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.

First Published Oct 30, 2022, 1:04 PM IST | Last Updated Oct 30, 2022, 1:04 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்த போட்டியாளர் என்றால் அது அசீம். தான் கடந்த வாரம் ஆயிஷா மற்றும் விக்ரமன் ஆகியோரை அவர் தரக்குறைவாக பேசியதற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அப்படி இருந்தும் திருந்தாத அசீம் இந்த வாரமும் தனது திமிர் பேச்சை தொடர்ந்து வந்தார்.

குறிப்பாக தனலட்சுமி மீது பொய் குற்றச்சாட்டை கூறினார். இதற்கு நேற்று குறும்படம் போட்டுக் காட்டி, அசீமை வாயடைக்க செய்தார் கமல், இந்நிலையில், இன்றைய எபிசோடில் போட்டியாளர்களுக்கு கமல் ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அதில் தனக்கென்று சொந்தமாக யோசிக்கும் புத்தி இல்லாத ஒரு ஆள் என்றால் யாரை சொல்வீர்கள் என சொல்லச் சொல்கிறார்.

இதையடுத்து எழுந்த அசீம், ராபர்ட் மாஸ்டர் பெயரை சொல்லி, அவர் அமுதவாணன் சொல்வதை தான் செய்து வருவதாக கூற, உடனே அவர் சொல்வதில் லாஜிக் இல்லை என அமுதவாணன் பதிலளித்தார். இதையடுத்து பேசிய ராபர்ட் மாஸ்டர், தான் அசீமிடம் பேசாததற்கான காரணத்தை கூறினார். அந்த துப்பாக்கி என்மீது திரும்பி விடுமோ என பயமாக இருந்ததால் அவரிடம் பேசவில்லை எனக்கூறி அசீமுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... ரொம்ப யோசிச்சுதான் இந்த முடிவ எடுத்திருக்கேன்..சிறுமி பாலியல் வழக்கில் சிக்கிய ஷங்கர் மருமகன் பரபரப்பு அறிக்கை

Video Top Stories