'காற்றின் மொழி' படத்தை தொடர்ந்து அடுக்கடுக்காக அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ளார் ஜோதிகா. அந்த வகையில், ஜாக்பார்ட், கார்த்திக்கு அக்காவாக ஒரு படம், ராட்சசி, உறைந்த மனிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ரேவதியுடன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள 'ஜாக்பார்ட்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து தற்போது ஜோதிகா ஆசிரியையாக நடித்துள்ள 'ராட்சசி' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இதில் மிகவும் துணிச்சலான பள்ளி ஆசிரியையாக நடித்து மிரட்டியுள்ளார் ஜோதிகா. அதில் அவர் பேசும் வசனங்களும் ரசிகர்கள் மனதில் பாதிக்கிறது "தீமை நடக்கிறது என்று சொல்லி அதனை தடுக்காமல், அதன் கூடவே பயணிக்கிறவர்கள் தீமையின் ஒரு பகுதியாகவே ஆகிறார்கள்... எதிர்த்து நிற்கிறவர்கள் வரலாகிறார்கள்". 

தன்னை கீதா ராணி என்று பள்ளி மாணவிகளிடம் அறிமுகப்படுத்தி கொண்டு, தன்னை கீதா என்றே கூப்பிடுங்கள் என அவர் சொல்லும் விதம், இதுவரை இல்லாத புது ஜோதிகாவை பாக்க முடிகிறது.

அரசு பள்ளிகள் என்றால், ஆசிரியர்கள் குழந்தைகள் மீது அக்கறை காட்டுவது இல்லை, என்பதை இந்த படம் கூறும் விதம், நடிகர் சமுத்திர கனி நடித்த, சாட்டை படத்தை நினைவு படுத்துகிறது. குற்றவாளிகளையும், கூலி தொழிலாளர்களையும் உருவாக்க பள்ளி கூடம் எதற்கு என அவர் கூறும் டயலாக் புல்லரிக்க வைக்கிறது.

அனைத்து ஆசிரியர்களும் ஜோதிகாவை திட்டுவது, கீதா ராணி என்றால் ஓவர் திமிரு என மேல் அதிகாரி கூறுவது, இந்த பள்ளியால் அவருக்கு கிடைக்கும் எதிர்ப்புகளை காட்டு கிறது. அதே போல் சிறுவன் ஒருவன் ஓடி வந்து உங்களை நான் பொண்ணு பாக்க வரட்டுமா என கூறுவது மாணவர்கள் இவர் மீது வைத்துள்ள அக்கறையை பாசத்தை பிரபதிபலிக்கிறது.

ஜோதிகா அனைவரையும் எதிர்த்து மாணவர்களுக்காக போராடுவது, அவரை பள்ளிக்கூட உள்ளேயே உழைய விட கூடாது என நடக்கும் சதிகள், தன்னுடைய பள்ளிக்காக சோடாபாட்டிலை உடைத்து மிரட்டும் ஜோதிகா என இப்படத்தில் வேற லெவலில் நடித்துள்ளார் ஜோ. மேலும் இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் அறத்தை எடுத்துரைக்கும் படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குனர் எஸ்.ஒய்.கெளதம் ராஜ் இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிட்டுள்ளது. இப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.