எப்போதும் வித்தியாசமான கதைகளை தேடி சென்று பயணித்து, அதனை திரைப்படமாக பதிவு செய்து ரசிகர்கள் மனதில் தன்னை ஒரு நடிகனாகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் நிலை நிறுத்தி கொண்டுள்ளவர் நடிகர் பார்த்திபன்.

தற்போது, இவர் ஒருவர் மட்டுமே ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7 ' இந்த படம் சஸ்பென்ஸ், திரில்லர் என அனைத்தும் கலந்த கலவையாக எடுக்கப்பட்டுள்ளது.

இவர் ஒருவர் மட்டுமே ஹீரோவாக நடித்துள்ளதால், இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. கடந்த வாரம் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் கலந்து  ஆடியோவை வெளியிட்டார். 

இதை தொடர்ந்து, தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பயோஸ்கோப் பிலிம் பிரேம்ஸ் தயாரித்துள்ளது. பார்த்திபன் இப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.