நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்  'கென்னடி கிளப்'. பெண்கள் கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசரை நடிகர் தனுஷ் இன்று 5 மணிக்கு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இயக்குனர் சுசீந்திரன், இதுவரை பார்த்திராத புது சசிகுமாரை கண் முன் நிறுத்தியுள்ளார். அதே போல் இயக்குனர் பாரதி ராஜா "கடந்த 25 வருடமாக ஆசியாவிலேயே இந்தியா தான் கபடியில் முதலிடம், ஆனால் கடந்த வருடம் தோற்று விட்டோம் என கூறுவது', உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் வசனமாக இருக்கிறது.

சசிகுமார் கபடி பயிற்சியாளர் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். ஆக்ஷன், விறுவிறுப்பு, விளையாட்டு என வேற லெவலில் இந்த படத்தை இயக்கியுள்ளார் சுசீந்திரன்.

அதே போல் சசிகுமார் 'கடைசி தீக்குச்சியில் இருக்கும் கவனம் முதல் தீக்குச்சியிலேயே இருந்தால் தான் ஜெயிக்க முடியும் என கூறுவது, ரசிகர்கள் மனதில் பதிகிறது.

மொத்தத்தில் 'கென்னடி கிளப்' மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.  டி.இமான் இசையில், குருதேவ் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் டீசர் இதோ: